- ஆர்.எஸ்.மங்கலத்தில் இன்று 4-வது நாளாக அண்ணாமலை நடைபயணம் செல்கிறார்.
- பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
ஆர்.எஸ்.மங்கலம்
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண், எண் மக்கள் என்ற நடைபயணத்தை கடந்த 28-ந்தேதி ராமேசு வரத்தில் தொடங்கினார். அன்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலை நடைபயணமாக சென்று பொதுமக்களை சந்தித்தார்.
3-வது நாளான நேற்று முதுகுளத்தூர் தொகுதியில் நடைபயணம் மேற்கொண்ட அவர் அங்குள்ள தேவர் சிலைக்கும், வீரன்சுந்தர லிங்கம் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பிரசித்தி பெற்ற திருஉத்திரகோசமங்கை கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் பிரசார வேனில் அண்ணாமலை சிறிது தூரம் சென்றார். அப்போது பொதுமக்களிடையே பேசுகையில், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 3½ லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் ஆகியும் எத்தனை பேருக்கு வேலைகிடைத்தது.
தமிழகத்தில் நடக்கும் ஊழல் ஆட்சியை ஒழிக்க வேண்டும். 2024-ம் ஆண்டு தாமரை மலரவே இந்த நடைபயணம் மேற்கொண்டு உள்ளோம் என்றார்.
அப்போது அண்ணா மலை பொதுமக்களிடம் பிரதமர் மோடி ராமநாத புரத்தில் போட்டியிட வேண்டுமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அங்கிருந்தவர்கள் ஆமாம் என கோஷமிட்டனர். அதன் பின்னர் பிரசாரத்தை முடித்த அண்ணாமலை ராமநாதபுரத்திற்கு திரும்பி னார்.
ஆர்.எஸ்.மங்கலம்
4-வது நாளான இன்று காலை 10 மணி அளவில் ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்ட அண்ணாமலை ஆர்.எஸ்.மங்கலத்தில் தனது நடைபயணத்தை தொடர்ந்தார்.
பழைய பஸ் நிலையத்தில் இருந்து கட்சி நிர்வாகி களுடன் ஊர்வலமாக சென்ற அண்ணாமலை பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் விலைவாசி ஏற்றம் குறித்தும், தி.மு.க. அரசின் நடவடிக்கை குறித்தும் சிறப்புரையாற்றினார். இன்று பிற்பகல் கள்ளிக்குடி ஊராட்சியில் நடக்கும் கிராம சபை கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொள்கிறார். அதன் பின் ஒன்றிய தலைவர் நர சிங்கம் வீட்டில் மதிய உணவை முடித்து கொண்டு திருவாடானையில் நடைபயணம் செல்கிறார். இரவு சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மக்களை சந்தித்து பேசுகிறார். வழிநெடுகிலும் பா.ஜனதா கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நடைபயணத்தின்போது முன்னாள் மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாநில செய லாளர் கருப்புமுருகானந்தம், மாநில இளைஞரணி செய லாளர் டாக்டர் ராம்குமார், மாநில ராணுவ அணி செயலாளர் எம்.சி.ரமேஷ், மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் தூவல் சத்தியமூர்த்தி மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.