உள்ளூர் செய்திகள்

மானிய விலையில் மின் மோட்டார் பெற விண்ணப்பிக்கலாம்

Published On 2023-03-29 08:30 GMT   |   Update On 2023-03-29 08:30 GMT
  • ராமநாதபுரம் மாவட்ட மானிய விலையில் மின் மோட்டார் பெற ஆதிதிராவிட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

2022-23-ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயி களுக்கான துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.

இந்த திட்டத்தில் மின் மோட்டார் குதிரைத்திற க்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 3 லட்சத்து 60 ஆயிரம் மானியத்தில் ஆதிதிராவிட விவசாயிகள் 900 பேருக்கும், பழங்குடியின விவசாயிகள் 100 பேருக்கும், மொத்தம் 1000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பத்திருக்க வேண்டும். துரித மின் இணைப்புத் திட்டத்தில் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5 குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.2.50 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.2ஆயிரமும் 7.5 குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ. 2.75 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத் தொகை ரூ. 27 ஆயிரத்து 500-ம் 10 குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம்

ரூ. 3 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ. 30, ஆயிரமும் 15 குதிரைத்திறன் மின் இணைப்புக்கட்டணம் ரூ. 4 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.40 ஆயிரத்திற்கான வங்கி வரைவோலை அளிப்பவர்களுக்கு முன்னு ரிமை அளிக்கப்படும். தகுதியில் லாத விண்ணப்பத்தாரர்கள் பங்குத்தொகை 10 சதவீதம் திருப்பி அளிக்கப்படும்.

கடந்த 2017 முதல் 2022 ஆண்டுகளில் மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும் தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10 சதவீத பயனாளி பங்குத்தொ கையுடன் புதியதாக விண்ணப்பிக்குமாறு ேகட்டுக்கொள்ளப் படுகிறது. ஏற்கனவே மின் இணைப்பு கோரி காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News