உள்ளூர் செய்திகள்

500 மரக்கூழ் சிலைகள் பிரதிஷ்டை

Published On 2023-08-24 07:53 GMT   |   Update On 2023-08-24 07:53 GMT
  • விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு 500 மரக்கூழ் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
  • இந்த ஆண்டு 500 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிற 19,20-ந்தேதி ஊர்வலம் நடக்கும் என்றார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத் தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்காக சுற்றுச்சூழல் நண்பனான காகித மரக் கூழால் 500 விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி சார்பில் வருகிற செப்டம்பர் 19-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப் படுகிறது. இதில் மாவட்டத்தில் 500 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

பின்னர் செப்டம்பர் 19ந்தேதி ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், பரமக்குடி, உச்சிப்புளி ஆகிய இடங்களிலும், வருகிற 20ந்தேதி ராமநாதபுரம், திருப்புல்லாணி, ஏர்வாடி, தேவிபட்டினம், சாயல்குடி ஆகிய இடங்களிலும் விநாய கர் சிலை ஊர்வலங்கள் நடக்க உள்ளது.

இந்தாண்டு விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழல் நண்பன் என்ற முறையில் மரக்காகித கூழ் கொண்டு 4 அடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு வாட்டர் கலர் மூலம் விநாயகர் சிலைகள் பிரமாண்டமாக தயாரித்து வருகின்றனர்.

இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி கூறுகையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்னை தமிழை காக்க ஆன்மிகத்தை வளர்ப்போம்' என்ற கருப் பொருளை அடிப்படையாக கொண்டு நடத்தப்படுகிறது. இந்துக்களின் ஒற்றுமை மற்றும் எழுச்சி விழாவாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இருக்கும்.

இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் எளிதில் தண்ணீரில் கரையும் விதமாக செய்யப்பட்டுள் ளது. இது மீன்களுக்கு உணவாகவும் பயன்படும். விநாயகர் சிலைகளில் சிம்ம வாகனம், மான் வாகனம், காளை வாகனம், மயில், அன்ன வாகனம் போன்ற வற்றில் விநாயகர் எழுந்தருளியுள்ளார். இந்த ஆண்டு 500 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிற 19,20-ந்தேதி ஊர்வலம் நடக்கும் என்றார்.

Tags:    

Similar News