திருப்புல்லாணி ஊராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம்
- திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் புல்லாணி தலைமையில் நடந்தது.
- காவிரி கூட்டு குடிநீர் திட்ட பொறியாளருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் புல்லாணி தலைமையில் பி.டி.ஓ.க்கள் ராஜேந்திரன், கணேஷ் பாபு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் பின்வருமாறு:-
கவுன்சிலர் பைரோஸ்கான்:- பெரியபட்டினம் சாலைகள் அனைத்தும் பழு தடைந்து உள்ளது. அதை புதுப்பித்து சாலை அமைக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. நிழற்குடை அமைக்க இடத்தை சரி செய்து தர வேண்டும். பெரிய பட்டினம் சுடுகாட்டிற்கு பாதை இல்லை என பலமுறை நான் கோரிக்கை வைத்தும் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. அதேபோல் வடக்கு குடியிருப்பில் மயானம் அமைத்துத் தர வேண் டும்.
கவுன்சிலர் கலாராணி:- தாதனேந்தல் பகுதியில் சம்பு கட்டி பயனின்றி உள்ளது. ஆனால் காவிரி கூட்டுக்குடிநீர் ஊர் மக்களுக்கு கிடைக்கவில்லை.
பி.டி.ஓ:- காவிரி கூட்டு குடிநீர் திட்ட பொறியாளருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கவுன்சிலர் காங்கிரஸ் திருமுருகன்:- ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ரேஷன் கடை கட்ட ஆலங்குளம் பகுதியில் நீதி பெற்றும் அங்குள்ள சமுதாய கட்டிடம் பாழ டைந்து உள்ளது. அதன் அருகில் தான் கட்ட வேண்டும். எனவே சமுதாய கட்டிடத்தை இடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பி.டி.ஓ. ராஜேந்திரன்:- உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கவுன்சிலர் நாகநாதன்:- ரெகுநாதபுரத்தில் அரசு இடத்தில் தனியார் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி வாடகைக்கு விடுகிறார். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மக்களைத் திரட்டி பஸ் மறியல் போராட்டம் நடத்துவோம்.
கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பி.டி.ஓக்கள் பதிலளித்தனர்.
இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன.
ஊராட்சி ஒன்றிய துணை சேர்மன் சிவலிங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் இருப்பதாக கூறி கேள்வி கேட்டதால் கடந்த கூட்டத்தில் சேர்மன் ஒருமையில் பேசியதாக கூறி இந்த கூட்டத்தில் அவரது இருக்கையில் அமராமல் செய்தியாளர்கள் அமரும் இடத்தில் அமர்ந்திருந்தார்.