உள்ளூர் செய்திகள்

தார்பாயால் மூடப்பட்டுள்ள உப்பு.

உப்புகள் தார்ப்பாயால் மூடி பாதுகாப்பு

Published On 2022-11-25 08:33 GMT   |   Update On 2022-11-25 08:33 GMT
  • ராமநாதபுரம் மாவட்ட உப்பளங்களில் விளைந்த உப்புகள் தார்ப்பாயால் மூடி பாதுகாக்கப்பட்டது.
  • இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கல் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் தொடங்கியது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழிலுக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி தொழில் அதிகமாக நடைபெற்று வருகிறது. ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலும் உப்பு உற்பத்தி நடைபெறும்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கல் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டம் கோப்பேரிமடம், திருப்புல்லாணி, ஆணைகுடி, காஞ்சிரங்குடி, நதிப்பாலம், உப்பூர், திருப்பாலைக்குடி, சம்பை, பத்தனேந்தல் உள்ளிட்ட பல ஊர்களில் உப்பள பாத்திகளில் கல் உப்பு உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக உப்பள பாத்திகள் முழுவதும் நீரில் மூழ்கி போனது. இதனால் கல் உப்பு உற்பத்தி செய்யும் பணி முழுமையாக பாதிக்கப்பட்டு உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது.

கோடை காலத்தில் அதிகப்படியாக விளைந்த உப்பை பாத்திகளின் ஓரம் கொட்டி தார்ப்பாயால் பாதுகாத்து வருகின்றனர். உணவிற்கான உப்பு, ரசாயனம் மற்றும் உர தொழிற்சாலைக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள உப்பு, சரக்கு லாரிகள் மூலம் தூத்துக்குடி, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.

பாத்திகள் முழுவதும் நீரில் மூழ்கி உள்ளதால் உப்பு உற்பத்தி செய்யும் தொழிலை நம்பி வாழும் ஏராளமான தொழி லாளர்கள் வேலை வாய்ப்பு இழந்து மாற்று தொழிலை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News