உள்ளூர் செய்திகள்

அக்னி தீர்த்த கரையில் தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்.

ஐப்பசி அமாவாசையையொட்டி ராமேசுவரத்தில் குவிந்த பக்தர்கள்

Published On 2023-11-13 06:41 GMT   |   Update On 2023-11-13 06:41 GMT
  • ஐப்பசி அமாவாசையையொட்டி ராமேசுவரத்தில் பக்தர்கள் குவிந்தனர்.
  • போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம்

இந்தியாவில் முன்னோர் வழிபாட்டுக்கு முக்கியமான புண்ணிய தலங்களாக காசியும், ராமேசுவரமும் உள்ளன. இந்த நிலையில் ஒவ்வொரு மாத அமா வாசையின் போதும் முன்னோர்களுக்கு தர்ப் பணம் கொடுப்ப தற்காக ராமேசுவரத்திற்கு பக்தர்கள் அதிகமாக வருகை தருவார்கள்.

தீபாவளியை ஒட்டி வரும் ஐப்பசி மாத அமா வாசையும் முன்னோர்க ளுக்கு தர்ப்பணம் கொடுப் பதற்கு முக்கிய நாளாக கருதப்படுகிறது. இந்த அமாவாசை இன்று மாலை வரை உள்ளது. இந்த நிலையில் தீபாவளியை யொட்டி விடுமுறை உள்ளதால் அதிகளவில் குடும்பத்துடன் பக்தர்கள் ராமேசுவரம் வந்தனர். பக்தர்கள் ஏராளமான வாகனங்களில் வந்ததால் ராமேசுவரம் வீதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்ட னர். மேலும் அக்னி தீர்த்த கரையில் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

பக்தர்கள் அக்னி தீர்த்த கரையில் குடும்பத்துடன் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடி முன் ேனார்களை வழிபட்டனர்.

இதனால் அக்னி தீர்த்த கரையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தொடர்ந்து ராமநாத சுவாமி கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடி சுவாமி-பர்வத வர்த்தினி அம்பாளை தரிசித்தனர்.

Tags:    

Similar News