எத்தனை ஆண்டுகள் ஆனாலும் யாராலும் வீழ்த்த முடியாத இயக்கம் தி.மு.க.
- எத்தனை ஆண்டுகள் ஆனாலும் யாராலும் வீழ்த்த முடியாத இயக்கம் தி.மு.க. என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.
- துணை அமைப்பாளர்கள் ரமேஷ் கண்ணா, குமரகுரு, சத்தி யேந்திரன், கோபிநாத், தௌபீக் ரகுமான் உள் ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் தி.மு.க. மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட அமைப் பாளர் சம்பத் ராஜா தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் ராஜா, இன்பா, ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம், பரமக்குடி முருகேசன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசியதாவது:-
தி.மு.க.வின் நம்பிகை யாக இருப்பது இளைஞரணி.இளைஞரணி நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை எடுத்துக்கூறி இளை ஞர்களை இணைக்க வேண்டும்.
தி.மு.க.வை வீழ்த்தி விடாலாம் என நினைக்கி றார்கள். ஆனால் அது எத்தனை ஆண்டுகள் ஆனா லும் நடக்காது. யார் பெரியவன் என்ற சண்டையில் தான் பா.ஜ.க.-–அதி.மு.க. கூட்டணி முறிந்துள்ளது. இது நிரந்தரமல்ல. நாளையே சேர்ந்து விடுவார்கள். அதை பற்றி நமக்கு கவலையில்லை.
முதல்-அமைச்சரின் செயல்பாட்டை மக்களிடம் கொண்டு சென்று 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் துணை அமைப்பாளர்கள் ரமேஷ் கண்ணா, குமரகுரு, சத்தி யேந்திரன், கோபிநாத், தௌபீக் ரகுமான் உள் ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில இளைஞரணி மாநாட்டில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பது, தொகுதி வாரியாக கலைஞர் நூலகம் அமைப்பது, இல்லம் தேடி இளைஞரணி உறுப்பி னர்கள் சேர்ப்பது, மாரத் தான் போட்டி நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டது.