தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை
- தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
- ஜி.கே. வாசன் குற்றச்சாட்டினார்.
ராமநாதபுரம்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறிய தாவது:-
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அவர்களது உறவினர்கள் சொத்து விபரம் குறித்து பட்டியல் வெளியிட்டுள்ளார். இதை ஆளும் கட்சியினர் அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை தானா? என்பதை அறிய மக்கள் விரும்புகின்றனர். இதுகுறித்து அண்ணாமலை தெளிவாக கூறிவிட்டார். ஆனால் தி.மு.க.வினர் திரும்பத்திரும்ப பொய்யை கூறி உண்மை ஆக்க முயற்சிக்கின்றனர்.
பட்டாசு ஆலைகள் வெடி விபத்து தொடர்பாக பாதுகாப்பு குறித்து அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும். முதல்- அமைச்சர் மற்றும் அவரது அரசு வாக்கு றுதிகளை இதுவரை நிறைவேற்ற வில்லை. வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தேர்தல் வாக்குறுதியில் மதுபான கடைகள் 500 கடைகளை அடைப்போம் என்று கூறினர். ஆனால் இன்று வரை அது நடைபெற வில்லை.குறைந்தபட்சம் 25 சதவீத மதுபான கடைகளை வழிபாட்டு தலங்கள், பள்ளி-கல்லூரிகள் அருகில் உள்ள மது கடைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் கஞ்சா, ஹெராயின் மது போதை யால் இளைஞர்கள் வழி மாறி செல்கின்றனர். பிரதமர் மோடி ஹாட்ரிக் முறையில் 3-வது முறையாக பிரதமர் ஆவது உறுதியாகி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட நிர்வாகிகள் நாகேசுவரன், முன்னாள் எம்.பி.உடையப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. ராம் பிரபு, சிவகங்கை மாவட்ட தலைவர் பாலசுப்பிர மணியன், அயோத்தி உள்பட பலர் உடனிருந்தனர்.