உள்ளூர் செய்திகள்

கீழக்கரை தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி

Published On 2023-06-06 08:13 GMT   |   Update On 2023-06-06 08:13 GMT
  • கீழக்கரை தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது.
  • 9 கிராமங்களில் 8-ந் தேதி ஜமாபந்தி நடைபெற உள்ளது.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று (6-ந்தேதி) தொடங்கி வருகிற 16-ந்தேதி வரை (சனி, ஞாயிறு, திங்கள், விடுமுறை நாட்கள் தவிர) ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, கீழக்கரை, ராமேசுவரம், ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் தாலுகா வாரியாக நடைபெற உள்ளது. மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் சிவசுப்ரமணியன் தலைமையில் உத்திரகோசமங்கை உள் வட்டம் எக்ககுடி, பனை குளம், மாலங்குடி, மல்லல், ஆலங்குளம், நல்லிருக்கை, உத்திரகோசமங்கை ஆகிய 7 கிராமங்களில் இன்று ஜமாபந்தி நடந்தது.

பனையடியேந்தல், வேளானூர், மாணிக்கநேரி, புல்லந்தை, மாயாகுளம், கீழக்கரை, காஞ்சிரங்குடி, குள பதம், இதம்பாடல், ஏர்வாடி ஆகிய 9 கிராமங்களில் நாளை (7-ந் தேதி) நடைபெற உள்ளது. திருப்புல்லாணி, பள்ளமோர்குளம், களரி 1, 2, வெள்ளாமறிச்சுகட்டி, குதக்கோட்டை, களிமண்குண்டு, வண்ணாங்குண்டு, பெரியபட்டினம், ரெகுநாதபுரம் ஆகிய 9 கிராமங்களில் (8-ந் தேதி ) ஜமாபந்தி நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News