உள்ளூர் செய்திகள்

கீழக்கரையில் மக்களாட்சி பாதுகாப்போம் மக்கள் சங்கமம் மாநாடு நடந்த போது எடுத்த படம்.

மக்களாட்சி பாதுகாப்போம் மக்கள் சங்கமம் மாநாடு

Published On 2022-07-11 07:58 GMT   |   Update On 2022-07-11 07:58 GMT
  • கீழக்கரையில் மக்களாட்சி பாதுகாப்போம் மக்கள் சங்கமம் மாநாடு நடந்தது.
  • கொடியேற்றம், நாடகம், வினாடி-வினா போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சேரான் தெருவில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பாக மக்களாட்சி பாதுகாப்போம் என்ற தலைப்பில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கொடியேற்றம், புரட்சிப்பாடல் நாடகம், வினாடி-வினா போட்டி, உடற்பயிற்சி வரலாற்று ஆசிரியர்களை கவுரவப்படுத்துதல், வெளிநாடு சென்று பல்வேறு பதக்கங்கள் வென்றவர்களை கவுரவப்படுத்துதல் மற்றும் பரிசளித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

கீழக்கரை நகர் தலைவர் அகமது நதீர் தலைமை தாங்கினார். ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.எஸ்.டி. பி.ஐ.கட்சியின் கிழக்கு நகர் தலைவர் நூருல் ஜமான் வரவேற்புரை வழங்கினார்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மேற்கு நகர் தலைவர் ஹமீது பைசல் வாழ்த்துரை வழங்கினார். கீழக்கரை நகராட்சி தலைவர் செஹனாஸ் ஆபிதா, மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் சக்கினா பேகம் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் முகைதீன் அப்துல் காதர், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கீழை ஜஹாங்கீர் அரூஸி தொகுப்புரை ஆற்றினார். மாநாட்டு குழுத் தலைவர் ஹமீது சாலிஹ் நன்றி கூறினார்.

மாநாட்டில் கீழக்கரை பொதுமக்கள், ஜமாத்தார்கள், எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News