கீழக்கரை நகராட்சி கவுன்சில் கூட்டம்
- கீழக்கரை நகராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது.
- நடந்து செல்லும் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் அந்தக் குழிக்குள் விழுந்து காயமடைந்து வருகிறார்கள்
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்ற அவசரக் கூட்டம் நடந்தது. தலைவர் செஹானஸ் ஆபிதா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஹமீது சுல்தான்,ஆணையாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
கவுன்சிலர் சப்ராஸ் நவாஸ், துணைத் தலைவர் ஹமீது சுல்தான்: கடந்த 3 மாதங்களுக்கு முன் பொது நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பெத்ரி தெருவில் பைப்லைன் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டது. ஒப்பந்ததாரர் பழனி அதை எடுத்தார். அந்த இடத்தில் பைப் போடுவதற்கு குழிகள் தோண்டப்பட்டு 3 மாதங்களாக அப்படியே போட்டு வைத்துள்ளார். இதனால் அங்கு நடந்து செல்லும் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் அந்தக் குழிக்குள் விழுந்து காயமடைந்து வருகிறார்கள். அது ஏன் அப்படியே போடப்பட்டுள்ளது? ஓவர்சியர்: அந்த ஒப்பந்ததாரரிடம் பலமுறை கூறியும் நாளை பார்க்கிறேன், நாளை பார்க்கிறேன் என்று காலம் தாழ்த்தி வருகிறார்.
துணைத் தலைவர்: அவ்வாறு பணி செய்ய மறுக்கும் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றார். கவுன்சிலர்கள் பாதுஷா, காயத்ரி மீரான் அலி, நஸ்ருதீன். முஹம்மது ஹாஜா சுஐபு, சித்திக், சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா, பொறியாளர் அருள், மேற்பார்வையாளர் சாம்பசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.