- கீழக்கரை தாசிம்பீவி மகளிர் கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது.
- உதவிப்பேராசிரியை தேன்மொழி நன்றி கூறினார்.
கீழக்கரை
கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 2023-24-ம் கல்வி ஆண்டிற்கு பெற்றோர் -ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது. கல்லூரி கலையரங்கத்தில் இறை வணக் கத்துடன் தொடங்கியது. தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் தேன்மொழி வரவேற்றார்.
கல்லூரி முதல்வர் எஸ்.சுமையா மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டிய கல்லூரி விதிமுறைக ளையும் கல்வியின் முக்கியத் துவத்தையும் எடுத்து ரைத்தார்.
மேலும் ஆராய்ச்சி மற்றும் நிறுவனத்தொடர்பு இயக்குனர்இர்பான் அகமது மாணவிகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரும் பயிற்சி வகுப்புகள் பற்றியும், பெற்றோரும் மாணவிகளின் ஒழுக்க நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்து ரைத்தார்.
தொழில் முனைவோர் இயக்குனர் ரோசி பெர்னா ண்டஸ் கல்லூரியில் படிக்கும் போதே மாணவி கள் தொழில் வல்லுனராக உருவாகுவது குறித்து மாணவிகளுக்கு விளக்கி னார். முடிவில் தமிழ்த் துறை உதவிப்பேராசிரியை தேன்மொழி நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடு களை சீதக்காதி அறக்கட்ட ளையின் துணை பொது மேலாளர் ஷேக் தாவூது கான் மற்றும் பேராசிரியர் கள் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாண விகளின் பெற்றோர் கலந்து கொண்டனர்.