மின்வாரியத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
- ராமநாதபுரத்தில் மின்வாரியத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
- சென்னை தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கீழக்கரை
கீழக்கரை நுகர்வோர் நல சங்கத்தின் செயலாளர் செய்யது இப்ராகிம். இவர் ராமநாதபுரம் மாவட்ட மின் வாரிய பொது தகவல் அதிகாரிக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6(1)-ன் கீழ் மின்வாரியம் சம்பந்தப்பட்ட கேள்விக்கு தகவல் பெற மனு அளித்தார்.
ஆனால் அதற்கான பதில் ஏதும் வராத நிலையில் 26.01.2021 அன்று சென்னையில் உள்ள தகவல் ஆணையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். இந்த வழக்கு விசார ணைக்காக அவர் 2 முறை வீடியோ கான்ப்ரண்ஸ் மூலமும் 3 முறை ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வந்தார்.
இதன் தொடர்ச்சியாக விசாரணை முடிந்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்ட கேள்விக்கு தகவல் தராத ராமநாதபுரம் மாவட்ட மின் வாரியத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மனுதாரர் செய்யது இப்ராஹிமுக்கு உடனடியாக அவரின் கேள்விக்கு பதிலளிக்கவும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவின்படி, கீழக்கரை உதவி மின் பொறியாளர் ரூ.10 ஆயிரத்தை அபராத மாக செலுத்தினார்.