உள்ளூர் செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Published On 2022-07-26 08:07 GMT   |   Update On 2022-07-26 08:07 GMT
  • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
  • இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீர்வு காண அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் 258 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீர்வு காண அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம் செந்தனேந்தல் கிராமத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சந்தனமாரி வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.1 லட்சத்திற்கான காசோலையினையும், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை 6 திருநங்கைகளுக்கும், சமூகநல வாரியத்தின் மூலம் 3 திருநங்கைகளுக்கும், அடையாள அட்டைகளையும் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

Tags:    

Similar News