உள்ளூர் செய்திகள்

சிக்கலை தலைமையிடமாக கொண்டு யூனியன் அலுவலகம் அமைக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.

யூனியன் அலுவலகம் அமைக்க கலெக்டரிடம் மனு

Published On 2023-03-28 08:38 GMT   |   Update On 2023-03-28 09:00 GMT
  • சிக்கலை தலைமையிடமாக கொண்டு யூனியன் அலுவலகம் அமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
  • இளைஞர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்களை குறிவைத்து சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சிக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சிக்கல் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியை சுற்றி பல கிராமங்கள் இருப்பதால் முக்கிய பகுதியாக இருந்து வருகிறது.

கடந்த 2012 அ.தி.மு.க. ஆட்சியின் போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 110 விதியின் கீழ் சிக்கலை தலைமையிடமாக கொண்டு யூனியன் அலுவலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இதேபோன்று கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கடலாடி ஒன்றியத்தில் இருந்து சிக்கல் ஊராட்சியை தலைமையிட மாக கொண்டு யூனியன் அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அதற்கான பணிகள் நடக்கவில்லை.

சிக்கல் ஒன்றிய மேம்பாட்டு குழு தலைவர் மிசா சைபுதீன், செயலாளர் பச்சம்மாள், பொருளாளர் ஆறுமுகம் தலைமையில் கிராம மக்கள் சிக்கல் ஊராட்சியை தலைமையிட மாக கொண்டு யூனியன் அலுவலகம் அமைக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.


கலெக்டரிடம் மனு கொடுத்த பெண்கள்.

ராமநாதபுரம் பட்டணம் காத்தான் பகுதி-1 குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்்ந்த பெண்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

பட்டணம் காத்தான் பகுதி 1-ல் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.இந்த பகுதியில் இளை ஞர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்களை குறி வைத்து சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது. இதனால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.

மேலும் பெண்கள், பள்ளிக்கு செல்லும் மாணவிகள் மாலை நேரங்களில் வீட்டுக்கு வருவதில் அச்சுறுத்தல் உள்ளது. சட்டவிரோமாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News