உள்ளூர் செய்திகள்
- தொண்டி அன்ன பூரணேஸ்வரி சமேத நம்பு ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.
- பக்தர்களுக்கு அபிஷேக பால், பஞ்சாமிர்தம், சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.
தொண்டி
தொண்டி அருகே நம்புதாளையில் மிகவும் பழமையான சிவாலயமான அன்ன பூரணேஸ்வரி சமேத நம்பு ஈஸ்வரர் கோவிலில் பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு பால், பழம், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், அரிசி மாவு, பழங்களால் சிறப்பு அபிேஷகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்தி வீதி உலா நடைபெற்றது. வாசு, சுவாமிநாதன் ஆகியோர் பூஜை ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
அதே போல் தொண்டி சிதம்பரேஸ்வரர், திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வரர், தளிர் மருங்கூர் உலகேஸ்வரர் தீர்த்தாண்டதானம் சர்வ தீர்த்தேஸ்வரர் எஸ்.பி.பட்டிணம் ஏகாம்பரேஸ்வரர், ஓரியூர் சேயுமானவர் ஆகிய சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அபிஷேக பால், பஞ்சாமிர்தம் மற்றும் சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.