- ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடைபெற்றது.
- கோதண்டராமர் கோவிலில் விபீஷணர்க்கு பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.
ராமேசுவரம்
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ராம லிங்க பிரதிஷ்டை விழா நேற்று தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல் நாள் நிகழ்ச்சியான ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சி ராமேசுவரம் துர்க்கை அம்மன் கோவில் அருகில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து 2-ம் நாள் நிகழ்ச்சியான இன்று தனுஷ்கோடி செல்லும் சாலையில் அமைந்துள்ள கோதண்டராமர் கோவிலில் விபீஷணர்க்கு பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.
இதன் காரணமாக ராமநாத சுவாமி கோவிலில் இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜை நடைபெற்றது.அதனை தொடர்ந்து 7 மணி அளவில் விபிஷனர் அலங்காரத்துடன் புறப்பாடாகி ராம தீர்த்தக் கரையில் அமைந்துள்ள ராமர் கோவிலில் சென்று ராமர் சீதை மற்றும் லட்சுமணருடன் அழைப்பு கொடுத்தனர்.
பின்னர் ராமர் சீதை லட்சுமணர் தங்க கேடயத்தில் புறப்பாடு ஆகி திட்டகுடி, வர்த்தகன்தெரு வழியாக தனுஷ்கோடியில் அமைந்துள்ள கோதண்ட ராமர் கோவிலுக்கு சென்ற டைந்தனர். அங்கு மாலை பட்டமளிப்பு விழாவில் நடைபெற்ற பின்பு மாலை யில் அங்கிருந்து புறப்பட்டு ராமநாத சுவாமி கோவி லுக்கு வந்தடைகின்றனர்.
விபீஷணர் பட்டமளிப்பு விழா காரணமாக இன்று காலை 7 முதல் மாலை 5 மணி வரை ராமேஸ்வரம் கோவில் நடை அடைக்கப்பட்டு இருந்தன. கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராட தடை விதிக்கப்பட்டு இருந்தன. இதை அறியாமல் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். அவர்கள் மாலை வரை காத்திருந்து நடை திறந்தபின் சாமி தரிசனம் செய்தனர்.