உள்ளூர் செய்திகள்
ராமநாதசுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ. 1.39 கோடி
- ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ. 1.39 கோடி கிடைத்துள்ளது.
- உண்டியல் எண்ணும் பணியில் ஆன்மீக பணியாளர்கள் ஈடுபட்டள்ளனர்.
ராமேசுவரம்
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மாதந்திர உண்டியல் வருவாய் எண்ணும் பணி நேற்று காலையில் அம்பாள் சன்னதி முன்புள்ள பழைய திருமண மண்டபத்தில் இணை ஆணையர் செ.சிவராம்குமார், உதவி ஆணையர் பா.பாஸ்கரன் தலைமையில் தொடங்கியது.
இதில் உண்டியல் வருவாயாக ரூ. 1 கோடியே 39 லட்சத்து 22 ஆயிரத்து ரூ 935-ம், 216 கிராம் 200 மில்லி கிராம் தங்கம், 9 கிலோ 515 கிராம் வெள்ளி கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உண்டியல் எண்ணும் பணியில் ஆய்வர் அ.பிரபாகரன், பேஸ்கார்கள் பஞ்சமூர்த்தி, கமலநாதன் மற்றும் உளவார ஆன்மீக பணியாளர்கள் என 150 க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டள்ளனர்.