- கீழக்கரையில் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
- ரூ.1.40 கோடி செலவில் மின் மயானம் அமைக்க அரசு தரப்பில் பணிகள் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இந்துக்கள் மயானத்தில் ரூ.1.40 கோடி செலவில் மின் மயானம் அமைக்க அரசு தரப்பில் பணிகள் ெதாடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த நிலையில் கடந்த நகராட்சி கூட்டத்தில் மின்மயானம் அமைப்பதற்கு பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு வந்த நிலையில் அந்த தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவின்பேரில் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் கீழக்கரை தாசில்தார் சரவணன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம், துணை தாசில்தார் பழனிக்குமார், கீழக்கரை நகராட்சி ஆணையாளர் செல்வராஜ், நகராட்சி பொறியாளர் மீரான் அலி ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 18 சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் பங்கேற்ற சமுதாய நிர்வாகிகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மயானத்தில் மின்மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு அறிவித்துள்ள இந்த நல்ல திட்டத்திற்கு தாங்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும், அதே சமயத்தில் கீழக்கரை இந்துக்கள் மயானம் பிரதான சாலையில் அமைந்துள்ளதால் அனைத்து தரப்பு மக்களுக்கும் இடையூறாக இருக்கும் என்றும், மின் மயானத்தை அரசுக்கு சொந்தமான வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும்,இ து குறித்து மாவட்டம் நிர்வாகம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரி வித்தனர். மக்கள் தெரிவித்த கருத்துக்களை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிப்பதாக கீழக்கரை தாசில்தார் சரவணன் தெரிவித்தார்.