ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க செயற்குழு கூட்டம்
- ராமநாதபுரத்தில் ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
- வருகிற 21-ந் தேதி சென்னையில் ஐம்பெரும் விழா நடைபெற உள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் ராமநாதபுரம் பழைய பஸ் நிலையம் அருகே தனியார் விடுதியில் நடந்தது. இதில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத்தலைவர் தியாகராஜன் கலந்துகொண்டார்.
அவர் கூறுகையில், வருகிற 21-ந் தேதி சென்னையில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் ஐம்பெரும் விழா நடைபெற உள்ளது. அதில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 53 ஆயிரம் தொகுப்பு ஊதியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் காலமுறை ஊதியம் வழங்காமல் காலம் தாழ்த்தினர். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்பு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி 53 ஆயிரம் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதற்கான உத்தரவில் கையெழுத்தை போட்டு வாழ்வாதாரத்தை உருவாக்கினார்.
அவருக்கு கடலில் பேனா வைப்பதை ஆசிரியர் சமூகம் வரவேற்கிறது. அதை நினைவுபடுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் 53 ஆயிரம் மாணவர்களுக்கு பேனா வழங்கப்பட உள்ளது என்றார்.