- வாணி ஊரணியை பொதுமக்கள் தூர்வாரினர்.
- தூர்வாரப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த ஊரணியை ஊராட்சி மன்றத் தலைவர் பார்வையிட்டு பாராட்டினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த வாணி கிராமத்தில் மன்னர் காலத்தில் தானமாக வழங்கப்பட்ட குளம் பராமரிப்பு இல்லாமல் கிடந்தது. இதனை பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
வாணி ஊரணி பெரிய பரப்பளவை கொண்டதால் அதனை தூர்வார அதிகளவில் நிதி செலவினம் ஆகும். இதனால் தூர்வாறும் பணி தாமதமானது.
இதுகுறித்து தற்போதைய கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து அவர் சக்கரக்கோட்டை ஊராட்சி மூலம் ரூ.2 லட்சம் நிதி வழங்க பரிந்துரைத்தார். அதனைத்தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர் செ.யாழினி புஷ்பவள்ளி நிதியை அனைத்து சமுதாய மக்களிடம் வழங்கினார். அதனை தொடர்ந்து வாணி கிராம ஜமாத்தார்கள், அனைத்து சமுதாய பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றி ணைந்து வாணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் ரூ. 20 லட்சம் வரை திரட்டினர்.
அதனை தொடர்ந்து ஊரணியை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். பொதுமக்களின் சீரிய முயற்சியால் தூர்வா ரப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த ஊரணியை ஊராட்சி மன்றத் தலைவர் பார்வை யிட்டு பாராட்டினார்.அதனைத் தொடர்ந்து மழை வேண்டி அனைத்து சமுதாய மக்களால் பிரார்த் தனை செய்யப்பட்டது.