உள்ளூர் செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை

Published On 2023-09-23 08:37 GMT   |   Update On 2023-09-23 08:37 GMT
  • கமுதி அருகே நத்தம் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது.
  • வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிகிறது.

பசும்பொன்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதி யில் ஒவ்வொரு திங்கட் கிழமையும் வாரச்சந்தை நடைபெற்று வந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நேரடியாக கலந்து கொண்டு காய்கறி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வந்தனர். இந்தவாரச்சந்தை கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாரச்சந்தை வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய கடைகள் கட்டப்பட்டது. ஆனால் பேரூராட்சி நிர்வா கம் அதனை வியாபாரி களுக்கு வழங்குவதில் பார பட்சம் காட்டியதாக தெரிகி றது. மேலும் கடைகளுக்கு அரசு நிர்ணயித்த கட்ட ணத்தைவிட கூடுதல் கட்ட ணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.

ஒப்பந்ததாரர்கள் வியாபாரிகளை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்தனர். இதுதொடர்பாக கலெக்டர், அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. பல்வேறு இன்னல்கள் கார ணமாக அபிராமம் பகுதியில் வாரச்சந்தை நடத்துவதில் வியாபாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.

இதன் காரண மாக அபிராமம் அருகே உள்ள நத்தம் ஊராட் சிக்குட்பட்ட அபிராமம்-மதுரை சாலையில் வாரச் சந்தை நடத்த வியாபாரிகள் முடிவு செய்தனர்.

இதற்கு நத்தம் ஊராட்சி மன்ற கூட்டத்தில் உறுப்பினர்க ளின் ஆதரவோடு தீர்மான மும் நிறைவேற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து இனிவரும் காலங்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழ மையும் நத்தம் ஊராட்சியில் வாரச்சந்தை நடைபெறும் என ஊராட்சி மன்ற தலை வர் போத்தி தெரிவித்து உள்ளார்.

அபிராமம் பேரூராட்சி யில் வாரச்சந்தை நிறுத்தப் பட்டதால் வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிகிறது.

Tags:    

Similar News