ராணிப்பேட்டையில் அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி
- வருகிற 11-ந் தேதி நடக்கிறது
- கலெக்டர் அறிவிப்பு
ராணிப்பேட்டை:
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை சிறப்பாக கொண்டாடும் வகையில் 2022-2023-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் பிரிவின் சார்பாக வருகிற 11-ந் தேதி காலை 7 மணிக்கு நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -
இதில் இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும், 13 வயது வரை உள்ள மாணவர்களுக்கு 15 கி.மீ.தூரமும், மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், 15 வயது வரை உள்ள மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ.தூரமும், 17 வயது வரை உள்ள மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும் எ 15 கி.மீ. தூரமும் நிர்ணயிக்க ப்பட்டுள்ளது.
மேற்கண்ட 3 வயது பிரிவுகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்குகாசோலை மூலம் முதல் பரிசாக ரூ.5000 இரண்டாம் பரிசாக ரூ.3000 மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு தினப்படி/பயணப்படி ஏதும் வழங்க மாட்டாது. போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் தங்கள் பெயர்களை 11-ந் தேதி காலை 6 மணிக்குள் போட்டி தொடங்கும் இடத்தில் நேரடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டிகள் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி ஆன்சிலரி பெல் ரூட், சீக்கராஜபுரம், முகுந்தராயபுரம், அக்ராவரம், திருமலை கெமிக்கல்ஸ் கம்பெனி வழியாக சென்று தேசிய நெடுஞ்சாலை எண். 40,பெல் நிறுவனம் வரையும் சென்று மீண்டும் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரும்பி வரும் வகையில் நடத்தப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அலுவலக நேரங்களில் 0416 2221721 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.