ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
- போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
- வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்
ராணிப்பேட்டை:
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் ஊழல் தடுப்பு வாரத்தை முன்னிட்டு ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கியது.
ஊர்வலத்தை ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப் பிரண்டு கிரண்ஸ்ருதி கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 3000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். ஊர்வலம் நவல்பூர், கெல்லீஸ் ரோடு என நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மாணவ-மாணவிகள் ஊழலுக்கு எதிரான விழிப்பு ணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந் தியவாறு சென்றனர்.
இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்ரமணியம், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.