உள்ளூர் செய்திகள்

உடைப்பு ஏற்பட்டு வீணாகும் நீர்.

கால்வாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்

Published On 2022-09-27 10:16 GMT   |   Update On 2022-09-27 10:16 GMT
  • விவசாயிகள் வலியுறுத்தல்
  • அதிகமான தண்ணீர் வரத்தால் மணல் மூட்டைகள் அடித்து செல்லப்பட்டது

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு அதன் கிளை ஏரிகளான பாசனம் பெறும் ஆலப்பாக்கம், கன்னிகாபுரம், மாகாணிப்பட்டு, துரை பெரும்பாக்கம், உத்திரம் பட்டு, புதுப்பட்டு, கருணாவூர் போன்ற கிராமத்தில் உள்ள மக்கள் காவேரிப்பாக்கம் ஏரி நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர்.

காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து துறை பெரும்பாக்கம், ஆலப்பாக்கம், மகானிப்பட்டு செல்லும் கால்வாயில் காங்கிரீட் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதனை பொதுப்பணித்துறையினர் மணல் மூட்டைகள் அடுக்கி தடுத்தனர்.

ஆனாலும் அதிகமான தண்ணீர் வரத்து இருப்பதால் மணல் மூட்டையில் அடித்து செல்லப்பட்டு ஏரிக்கு செல்லும் கால்வாயில் தண்ணீர் செல்லாமல் பணப்பாக்கம் காவேரிப்பாக்கம் வழியாக செல்லும் மதகில் தண்ணீர் செல்வதால் ஏரிக்கு தண்ணீர் செல்லாமல் மதகு வழியாக தண்ணீர் வீணாகிறது.

எனவே காவேரிப்பாக்கம் ஏரிநிரம்பியும் அதன் கிளை ஏறிகளில் தண்ணீர் செல்லாமல் இருப்பது விவசாயிகளிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

எனவே உடனடியாக உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் தடுப்புகள் கட்டி அந்த கால்வாயில் தண்ணீர் வீணாகாமல் அதனை சரி செய்யக் கோரி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News