ரூ.77 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள்
- அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
- அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி ராணிப்பேட்டை நகராட்சி வாரச் சந்தை வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டம் நகரம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.26 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள வளமீட்பு மையம், திடக்கழிவு மேலாண்மை குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தில் தனியார் வங்கியின் சமுதாய பங்களிப்பு திட்ட நிதி மூலம் ரூ.24 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் அரவை எந்திரம் ஒப்படைப்பு, 15-வது நிதிக் குழு மான்யம் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை நகராட்சியில் குப்பைகளை எடுத்துச் செல்ல ரூ.6 லட்சம் மதிப்பிலான 3 பேட்டரி வாகனங்கள், ரூ.21லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான 3 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் ரூ.77லட்சத்து 90ஆயிரம் மதிப்பில் ெசய்யப்பட்டுள்ளது. இந்த திட்ட பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
இந்த திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு வளமீட்பு மையத்தை திறந்து வைத்து, திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஜி.கே. உலகப்பள்ளி இயக்குநர் வினோத் காந்தி, நகரமன்றத் தலைவர் சுஜாதா, துணைத்தலைவர் ரமேஷ் கர்ணா, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், நகராட்சி ஆணையர் விநாயகம், நகரமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.