வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் தி.மு.க. நிர்வாகிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும்
- சரிபார்க்கும் பணியில் ஈடுபட வேண்டும்
- அமைச்சர் ஆர்.காந்தி வேண்டுகோள்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதி தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வருகினற 27-ந்தேதி அன்று வெளியிட உள்ளது.
வருகிற 27-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 9-ந்தேதி வரை புதிய வாக்காளர்களை சேர்க்கவும், பெயர்கள் நீக்கவும், திருத்தம் செய்யவும் மனு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர நவம்பர் மாதத்தில் 4, 5, 18, மற்றும் 19 ஆகிய 4 தேதிகளில் நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இந்த முகாம்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும், ஜனவரி 1-ந்தேதி அன்று 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அந்தந்த முகாம்களில் கொடுக்க வேண்டும்.
வருகிற ஜனவரி 1-ந்தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும், புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும்,
ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் வாக்குச் சாவடி நிலைய முகவர்கள் ஆகியோர் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி முனைப்புடன் செயல்பட்டு வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.