உள்ளூர் செய்திகள்

இந்தியன் வங்கி கிளை அமைக்க வேண்டும்

Published On 2023-10-04 08:25 GMT   |   Update On 2023-10-04 08:25 GMT
  • பொதுமக்கள் வலியுறுத்தல்
  • ஏராளமான விவசாயிகள் கலந்து கலந்து கொண்டனர்

காவேரிப்பாக்கம்:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம்,பாணாவரம் அடுத்த வெளிதாங்கிபுரம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

துணைத்தலைவர் தணிகைமலை, வார்டு உறுப்பினர் செல்லப்பன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பளாராக மாவட்ட ஊராட்சிக்குழு மற்றும் திட்டகுழு உறுப்பினர் சுந்தரம்மாள், நெமிலி ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வெளிதாங்கிபுரம் மக்கள் அளித்த கோரிக்கை மனுவில்,'எங்கள் பகுதியில் 1,500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

வெளிதாங்கிபுரம் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளனர். இங்குள்ள விவசாயிகள் வங்கி கடன், பயிர் கடன் பெறவும், மாணவர்கள் கல்வி கடன் பெறவும், தேசியமயமாக்கப்பட்ட வங்கி தேவைப்படுகிறது.மேலும், வெளிதாங்கிபுரம் கிராமத்தில் ஏழை மக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர்.

இந்ததிட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வங்கி கணக்கை துவக்க ஏதுவாக, இந்தியன் வங்கியின் கிளையை வெளிதாங்கிபுரத்தில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News