புதிய, திருத்தம் செய்யப்பட்ட ரேசன் அட்டைகள் தபால் மூலம் அனுப்பும் பணி
- கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்தார்
- கட்டணமாக மொத்தம் 45 ரூபாய் ஆன்லைனில் செலுத்த வேண்டும்
ராணிப்பேட்டை:
புதிய மின்னணு அட்டைகள் வட்ட வழங்கல் அலுவலகங்கள், உணவு பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மண்டல் அலுவலகங்கள் மூலமாக பயனாளிகள் பெற்று வருகின்றனர்.
உறுதி செய்யப்பட்ட சேவையினை அளிக்கும் பொருட்டும், நேரடியான தொடர்பினை தவிர்க்கும் பொருட்டும், இந்திய தபால் துறையின் மூலம் பயனாளிகளின் இருப்பி டத்திற்கு, பயனாளிகளின் விண்ணப்பத்தின் பேரில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அனுப்பப்படுகிறது.
புதிய ரேசன் அட்டை மற்றும் நகல் ரேசன் அட்டையினை தங்களின் இருப்பிடத்திலலேயே பெற விருப்பம் தெரிவிக்கும் பயனாளி களிடம் அஞ்சல் கட்டணம் வசூலித்து நகல் ரேசன் அட்டைகள் சம்பந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
பயனாளி கள் புதிய ரேசன் அட்டை மற்றும் நகல் ரேசன் அட்டைக்கு விண்ணப்பி க்கும் போது ரேசன் அட்டையினை தபாலில் பெற விரும்புகிறாரா அல்லது நேரில் பெற விரும்புகிறாரா என விருப்பம் தெரிவிக்க www.tnpds.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த விருப்பத்தின் பேரில் பயனாளிக்கு தபால் மூலம் குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.
இதற்கான தபால் கட்டணம் புதிய ரேசன் அட்டைக்கு ரூ.25ம், நகல் அட்டைக்கு கட்டணம் ரூ.20, தபால் கட்டணம் ரூ.25 என மொத்தம் 45 ரூபாய் ஆன்லைனில் செலுத்த வேண்டும். அஞ்சல் வழியாக பெற விருப்பம் இல்லாத நபர்களுக்கு தற்போதைய நடைமுறைப்படியே குடும்ப அட்டை வழங்கப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 210 பயனாளிகள் ரேசன் அட்டையில் திருத்தம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பொழுது அஞ்சல் வழியாகவே புதிய திருத்தம் செய்யப்பட்ட மின்னணு நகல் அட்டையினை பெற விருப்பம் தெரிவித்து கட்டணம் செலுத்தி இருந்தனர். அவர்களுக்கான புதிய மின்னணு அட்டைகள் வரப்பெற்று தபால் அலுவலகம் வாயிலாக பயனாளிகளின் முகவரிக்கு அனுப்பும் நடைமுறையினை கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, தபால் துறை விற்பனை மேலாளர் இலியாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.