மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
- கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்தார்
- மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை நகரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கிராம குடிநீர் திட்டக் கோட்டம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்து மாணவர்கள், மகளிர் குழுக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் மாவட்டம் முழுவதிலும் மழைநீர் சேகரிப்பு குறித்து குறும்படங்கள் ஒளிபரப்பும் வகையில் மின்னனு காணொளி வாகன பிரச்சார தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி கொடி அசைத்து, ஊர்வலத்தையும், வாகன பிரச்சாரத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நகரமன்றத் தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உதவி நிர்வாகப் பொறியாளர் குமரவேல், துணை நில நீர் வல்லுநர் மணிமேகலை, உதவி பொறியாளர் ஜெ யப்பிரியா, உதவி கணக்கு அலுவலர் நடராஜன் மற்றும் பொதுமக்கள், மகளிர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.