ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
- மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. பங்கேற்பு
- 18 நபர்கள் கொண்ட பூத் கமிட்டியை அமைக்க வேண்டும்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் ஒன்றிய,நகர,பேரூர் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர்.ராணிப்பேட்டை நகர செயலாளர் கே.பி.சந்தோஷம் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் வருகிற மே 12-ந் தேதியன்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் , தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு கிளை மற்றும் வட்டங்களில் கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்,
வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பூத்திற்கும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று 18 நபர்கள் கொண்ட பூத் கமிட்டியை அமைக்க வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பூத்திற்கும் பூத் வாரியாக பெண்கள் குழு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
அதில் நிர்வாகிகள் 9 பேர் செயற்குழு உறுப்பினர்கள் 9 பேர் மற்றும் உறுப்பினர்கள் என 25 நபர்களை நியமிக்க வேண்டும் என்பது உட்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்ட பொருளாளர் ஷாபூதீன், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் பூண்டி பிரகாஷ் உள்பட நகர , ஒன்றிய , பேரூர் செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.