உள்ளூர் செய்திகள்

புயல் மழையால் 4000 ஏக்கர் பயிர்கள் சேதம்

Published On 2022-12-13 09:25 GMT   |   Update On 2022-12-13 09:25 GMT
  • வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது
  • இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம் அது சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் மட்டுமே உள்ளது.

இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். கடந்த 3 நாட்களாக மாண்டாஸ் புயலின் தாக்கத்தால் தொடர் கனமழை பெய்தது.

இதனால் கார்த்திகை மாதம் சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். ஏக்கருக்கு 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து நடவு செய்த விவசாயிகள் தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது.

இதனால் மீண்டும் நாற்று விட்டு நடவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பிடு வழங்க வேண்டும் என இப்பகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சம்பா சாகுபடிக்காக சுமார் 4000 ஏக்கர் நெற்பயிர்கள் நடவு செய்து நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News