உள்ளூர் செய்திகள்

தொடர் திருட்டு சம்பவம் நடைபெறும் வன்னிவேடு அகத்தீஸ்வரர் கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும்

Published On 2023-05-18 07:20 GMT   |   Update On 2023-05-18 07:20 GMT
  • ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
  • மொத்தம் 21 மனுக்கள் பெறப்பட்டன

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளர் மோகன் கொடுத்த மனுவில்,வாலாஜா அடுத்த வன்னிவேடு கிராமத்தில் புவனேஸ்வரி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது.இந்த கோவிலின் பூட்டை உடைத்து தொடர்ந்து திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. இதற்காக கோவிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது, அவற்றையும் சேதப்படுத்தியும், திருடிச் சென்று விட்டனர்.

இந்த தொடர் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக வாலாஜா போலீசார் தீவிர விசாரணை நடத்தியோ, தனிப்படை அமைத்தோ திருட்டில் ஈடுபட்டவர்களை பிடித்து கோவிலுக்கு சொந்தமான பொருட்களை மீட்க வில்லை.

எனவே இனி வரும் காலங்களில் கோவிலில் திருட்டு சம்பவத்தை தடுக்க வேண்டும். கோவிலைச் சுற்றி உயர்கோபுரங்கள் அமைத்து அதில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். வாலாஜா போலீஸ் நிலையத்திலிருந்து நேரடியாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இது தவிர பொதுமக்களிடமிருந்து மொத்தம் 21 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்று கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மனுக்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News