சோளிங்கரில் 120 இடங்களில் நவீன கேமராக்கள் பொருத்தும் பணி தொடக்கம்
- ரூ. 32 லட்சம் மதிப்பில் கேமராக்கள் அமைக்கப்படுகின்றன.
- இரவு நேரங்களிலும் துல்லியமாக படம்பிடிக்கும் திறனுடையது.
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக திருட்டு வழிப்பறி உள்பட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு அடையாளம் காண்பதற்காக அனைத்து பகுதிகளிலும் முக்கிய இடங்களில் எச்.டி.வகை அதிநவீன கேமரா அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி பொதுமக்கள் கூடும் இடங்கள், கூட்டுசாலை, தெரு முனை்ப்நி்வாரச்சந்தை, பள்ளி உள்ளிட்ட 120 இடங்களில் நகராட்சி மூலம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 32 லட்சம் மதிப்பில் இந்த கேமராக்கள் அமைக்கப்படுகின்றன. இவை இரவு நேரங்களிலும் துல்லியமாக படம்பிடிக்கும் திறனுடையது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக முக்கிய பகுதிகளில் கேமரா பொருத் தப்படவுள்ள இடங்களில் கம் பம் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இதனை நகராட்சி துணை தலைவர் பழனி, நகராட்சி வார்டு உறுப்பினர் அன்பரசு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.