முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
- தற்போது தென்மேற்கு பருவமழை விடைபெற்று வடகிழக்கு பருவமழை தொடங்கி யுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
- இந்நிலையில் பெரு ம்பாலான அணைகள் முழு கொள்ள ளவை எட்டியுள்ள நிலையில் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக கடந்த சில நாட்களாக முல்லை பெரியாறு அணை யின் நீர்மட்டம் படிப்படி யாக உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியே ற்றப்பட்டது. இதன்கார ணமாக வைகை அணையின் நீர்மட்டமும் 60 அடியை எட்டியது. தற்போது தென்மேற்கு பருவமழை விடைபெற்று வடகிழக்கு பருவமழை தொடங்கி யுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பெரு ம்பாலான அணைகள் முழு கொள்ள ளவை எட்டியுள்ள நிலையில் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 123.75 அடியாக உள்ளது. வரத்து 1869 கன அடி. நேற்றுவரை 1322 கன அடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 700 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 3371 மி.கன அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 60.47 அடியாக உள்ளது. வரத்து 1355 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 3692 மி.கன அடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.90 அடியாக உள்ளது. வரத்து 65 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 413.15 மி.கன அடி. சோத்தப்பாறை அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 126 அடியை எட்டியது இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரத்து 9 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 99 மி.கன அடி.
பெரியாறு 21.4, தேக்கடி 22.4, கூடலூர் 21, உத்த மபாளையம் 20, சண்முகாநதி அணை 18.4, போடி 5.4, வீரபாண்டி 13.6, சோத்துப்பாறை 1 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.