வட்டார தடகள போட்டிகள்- கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் பள்ளி மாணவிகள் சாதனை
- போட்டியில் கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மாணவிகள் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றனர்.
- சீனியர் பிரிவில் பெமிஷா ஈட்டி எறிதல், வட்டி எறிதலில் முதல் பரிசு பெற்றார்.
வள்ளியூர்:
கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் வள்ளியூர் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற திசையன்விளை வட்டார தடகள விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இதில் கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மாணவிகள் அதிக புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றனர். ஜூனியர் பிரிவில் இன்பதரணி குண்டு எறிதலில் முதல் பரிசு, வட்டு எறிதலில் 2-ம் பரிசு, சீனியர் பிரிவில் பெமிஷா ஈட்டி எறிதல், வட்டி எறிதலில் முதல் பரிசு, குண்டு எறிதலில் 2-ம் பரிசு, ஜீசஸ் அனுஷா 1,500 மீட்டர் 2-ம் பரிசு, சூப்பர் சீனியர் பிரிவில் இந்து 200 மீட்டர் ஓட்டத்தில் 2-ம் பரிசு, தன்யா 100 மீட்டர், 400 மீட்டர் தடை ஓட்டங்களில் முதல் பரிசு, ரோமிஸ்ரீ ஈட்டி எறிதல், குண்டு எறிதலில் முதல் பரிசு அனுஜா 1500 மீட்டர் ஓட்டத்தில் முதல் பரிசு 800 மீட்டர் ஓட்டத்தில் 2-ம் பரிசு சந்தியா வட்டு எறிதலில் முதல் பரிசு, பிளசி வட்டு எறிதல், குண்டு எறிதலில் 2-ம் பரிசு, மேலும் 4×400 தொடர் ஓட்டத்தில் முதல் பரிசு, 4×100 தொடர் ஓட்டத்தில் 2-ம் பரிசும் பெற்றுள்ளார்கள்.
வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளித் தாளாளர் டாக்டர் தினேஷ், முதல்வர் முருகேசன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சுந்தர் ஆகியோர் பாராட்டினார்கள்.