உள்ளூர் செய்திகள்

மாணவர்ளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டபோது எடுத்தபடம்.

விளாத்திகுளம் அரசு பள்ளியில் விபத்தில்லா தீபாவளி குறித்து ஒத்திகை

Published On 2022-10-19 09:17 GMT   |   Update On 2022-10-19 09:17 GMT
  • விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.
  • பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து செயல்விளக்கம் நடைபெற்றது.

விளாத்திகுளம்:

விளாத்திகுளத்தில் விபத்தில்லா தீபாவளி பண்டிகை மற்றும் வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தீபாவளி பண்டிகையன்று பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து பள்ளி மாணவா்களுக்கு செயல்விளக்கம் நடைபெற்றது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், மருத்துவமனைகள், கேஸ் சிலிண்டர் இருக்கும் இடங்கள், கூரை வீடு, வைக்கோல் படப்புகள் ஆகிய இடங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது. அரசு அறிவித்துள்ள நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என மாணவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பயிற்சியில் தலைமையாசிரியை ரோஸ்லின் சாந்தி, மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News