உள்ளூர் செய்திகள்

தொண்டாமுத்தூர் அருகே அதிகாலையில் தடையை மீறி ரேக்ளா பந்தயம்

Published On 2022-09-28 10:06 GMT   |   Update On 2022-09-28 10:06 GMT
  • ரேக்ளா பந்தயத்தில் வாலிபர்கள் பங்கேற்று மாட்டு வண்டிகளில் சீறிப்பாய்ந்தனர்.
  • வாலிபர்கள் பங்கேற்று 20 மாட்டு வண்டிகளில் சீறிப்பாய்ந்த னர்.

வடவள்ளி

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ளது தேவராயபுரம். இந்த பகுதியில் அதிகாலை ரேக்ளா பந்தய போட்டி நடைபெற்றது.

இதில் நரசீபுரம், பேரூர், தீத்திபாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வாலிபர்கள் பங்கேற்று 20 மாட்டு வண்டிகளில் சீறிப்பாய்ந்த னர்.

ரேக்ளா பந்தயம் தேவராயபுரத்தில் தொடங்கி நரசீபுரம் வரை சென்றது. இதனால் அந்த பகுதியில் அதிகாலை நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலையில் சத்தம் கேட்டு மக்கள் எழுந்து பார்த்தனர்.

அதிகாலை நேரத்தில் ரேக்ளா பந்தயத்தில் ஈடுபட்டதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி யடைந்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறிய தாவது:-

கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் இரவு நேரங்களில் ரேக்ளா பந்தயம் போட்டி நடத்தி வருகின்றனர். இதனால் இரவில் வெளியில் வருவதற்கே அச்சமாக உள்ளது. மேலும் இரவில் யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்றால் அவசரமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் ஆம்புலன்சுக்கும் வழிவிடுவதில்லை. இதனால் மிகவும் சிரமமாக உள்ளது.

அதிகாலை நேரத்தில் மக்கள் தூங்கி கொண்டிருக்கும் வேளையில் அதிக சத்தத்துடன் செல்வதால் அவதியாக உள்ளது. எனவே போலீசார் இரவு நேரங்களில் தடையை மீறி ரேக்ளா பந்தயம் நடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News