சேலம் கோட்டையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
- கோட்டை ஹபீப் தெருவில் சாலையோர கடைகள் அகற்றப்பட்டு அப்சரா சாலையில் மாற்று இடம் வழங்கப்பட்டது. மாற்று இடத்தில் மாநகராட்சி அனுமதியுடன் 41 கடைகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- இதையடுத்து அனுமதி இன்றி வைக்கப்பட்ட 6 கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.
சேலம்:
சேலம் மாநகராட்சி உத்தரவின்பேரில் கோட்டை ஹபீப் தெருவில் சாலையோர கடைகள் அகற்றப்பட்டு அப்சரா சாலையில் மாற்று இடம் வழங்கப்பட்டது. மாற்று இடத்தில் மாநகராட்சி அனுமதியுடன் 41 கடைகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே இடத்தில் அனுமதியின்றி சிலர் கடைகள் அமைத்தனர். அனுமதியின்றி அமைக்கப்பட்ட கடைகள் காவல்துறை பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
41 கடைகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு இருப்பதாக வியாபாரிகள் குற்றசாட்டினர். எந்த அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்பட்டன என்பது குறித்து வியாபாரிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மாமன்ற கூட்டம் ஒப்புதல் படியே கடைகள் ஒதுக்கப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இதையடுத்து அனுமதி இன்றி வைக்கப்பட்ட 6 கடைகளை அதிகாரிகள் அகற்றினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.