வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம்
- மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து காலதாமதம் இல்லாமல் உணவு அளிக்க வேண்டும்.
- அதிகாரிகள் கடமை உணர்வோடும் மனசாட்சியோடும் செயல்பட வேண்டும்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே செம்போடை கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
வடகிழக்கு பருவமழை பாதிப்பாக மாறும் நிலையில் பாதிக்கப்படும் மக்களுக்கு சேவை செய்யவிரைவாக அனைத்துத்துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
பருவமழை பாதிப்பின்போது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து காலதாமதம் இல்லாமல் உணவு அளிக்க வேண்டும்.
மின்சாரம், கைபேசி, குடிநீர், மருத்துவமனை ஆகியவைகளை ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அதிகாரிகள் கடமை உணர்வோடும் மனசாட்சியோடு ம்செயல்பட வேண்டும்.
அப்படி செயல்பட்டால் நான் மனிதநேயத்தோடு செயல்பட்டதற்கான உரிய மதிப்பு மக்களிடமிருந்து நமக்கு கிடைக்கும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா, வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பெளலின், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜி பாஸ்கர், அண்ணாதுரை, வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.