உள்ளூர் செய்திகள்
நெல் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்கள் விளக்கம்
- பி12 - நெல் விழாவில் பங்கேற்று நெல் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
- வேளாண் அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பெரியகுளம்:
திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை கல்லூரியை சேர்ந்த மாணவர்களான அருண்பாரதி, ஆசிஷ்குமார், லிங்கேஸ்வரன், தேவா, மகிழ் அமுதன் ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் மேல்மங்கலம் பகுதியில் பெரியகுளம் வட்டார வேளாண்மை துறையினரால் நடைபெற்ற "பி12 - நெல் விழா"வில் பங்கேற்று நெல் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தனர். இதில் இலை வண்ண அட்டவணை கொண்டு நைட்ரஜன் பரிசோதிக்கும் முறை, இயற்கை முறையில் நெல் விதைநேர்த்தி செய்யும்முறை மற்றும் குருத்து பூச்சியை தடுக்கும் முறைகள் பற்றி தெளிவாக எடுத்துரைத்தனர்.
இதில் பாட ஆசிரியர்கள் டாக்டர் கண்ணபிரான், விஜயகுமார், வட்டார வேளாண் இணை இயக்குனர், காமாட்சிபுரம் சென்டகட் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.