- 2.40 கி.மீ. நீளம் சாலையை ரூ 17.50 கோடி மதிப்பில் இரு வழிதடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலபடுத்தும் பணி நடக்கிறது.
- சரி மட்ட அளவுகள், அடர்த்தி ஆகியவற்றை சரிபார்க்கும் கருவிகளை கொண்டு சேலம் தரக்கட்டுப்பாடு கோட்டப் பொறியாளர் வச்சலா வித்தியானந்தி, நேரில் களஆய்வு செய்தார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்திற்கு உட்பட்ட ராயக்கோட்டை-அத்திப்பள்ளி சாலையில் நல்லராலப்பள்ளி முதல் நாகமங்கலம் வரை முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2.40 கி.மீ. நீளம் சாலையை ரூ 17.50 கோடி மதிப்பில் இரு வழிதடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலபடுத்தும் பணி நடக்கிறது.
மேலும் தேன்கனி க்கோட்டை-கெலமங்கலம் வழி உத்தனப்பள்ளி செல்லும் சாலையில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 8-6 கி.மீ நீளம் ரூ 11-00 கோடி மதிப்பில் நடைப்பெற்று வரும் சாலை பணிகளின் நீளம், அகலம், மற்றும் சரி மட்ட அளவுகள், அடர்த்தி ஆகியவற்றை சரிபார்க்கும் கருவிகளை கொண்டு சேலம் தரக்கட்டுப்பாடு கோட்டப் பொறியாளர் வச்சலா வித்தியானந்தி, நேரில் களஆய்வு செய்தார்.
இதில் தேன்கனிக்கோட்டை உதவி கோட்டப் பொறியாளர் திருமால்செல்வன், கிருஷ்ணகிரி உதவி கோட்டப் பொறியாளர் பத்மாவதி, ராயக்கோட்டை உதவி பொறியாளர் மன்னர் மன்னன், கிருஷ்ணகிரி தரக்கட்டுப்பாடு இளநிலை பொறியாளர் வெண்ணிலா, சாலை ஆய்வாளர்கள் மற்றும் சாலை பணியாளர்கள் உடன் இருந்தனர்.