உள்ளூர் செய்திகள்

கொடைக்கானல் வனத்துறை அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள்


கொடைக்கானல் அருகே பெரியூர் மலை கிராமத்திற்கு சாலை வசதி அமைக்க கோரிக்கை

Published On 2022-06-15 05:40 GMT   |   Update On 2022-06-15 05:40 GMT
  • இப்பகுதி மக்கள் தங்களது அன்றாட தேவைகள் மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டும்.
  • பெரியூர் மலைக்கிராமத்திற்கு சாலை வசதி கோரி பொதுமக்கள் பல்வேறுவிதமான போராட்டங்களை செய்துள்ளனர்.

கொடைக்கானல் :

கொடைக்கானலில் மிகப் பழமையான மலைக்கிராமம் வெள்ளகவி.இதனையொட்டி மலைக்கிராமங்கள் சின்னூர் மற்றும் பெரியூரில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

மலைப்பகுதியின் உட்பகுதியில் இந்த கிராம–ங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகள் மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டும். பெரியூர் மலைக்கிராமத்திற்கு சாலை வசதி கோரி பொதுமக்கள் பல்வேறுவிதமான போராட்டங்களை செய்துள்ளனர். அரசுத்துறை அதிகாரிகளிடமும் மனு செய்து உள்ளனர்.

தற்போது வெள்ளகவி மலைக்கிராமத்திற்கு மண் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று பெரியூர் மலைக் கிராமத்திற்கும் சாலை அமைத்து தர வேண்டும் என்று கொடைக்கானல் வனச்சரக மாவட்ட வன அலுவலகத்திற்கு வந்தனர்.

தங்கள் பகுதிக்கு சாலை அமைத்து தர தடையில்லா சான்று வனத்துறையினர் உடனடியாக வழங்க வேண்டும் என்று பெரியூர் மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல மணி நேரம் பெரியூர் மலை கிராம மக்கள் வன அலுவலக வளாகத்தில் காத்திருந்தனர்.

போலீசார் மற்றும் வனத்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News