உள்ளூர் செய்திகள்
வருசநாடு-வாலிப்பாறை இடையே வனத்துறை தடையால் கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணி
- வருசநாடு-வாலிப்பாறை சாலை கடந்த 5 ஆண்டுகளாக பராமரிக்காததால் சேதமடைந்துள்ளது.
- வனத்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருநாடு:
வருசநாடு -வாலிப்பாறை இடையே சுமார் 5 கி.மீ தொலைவில் வனத்துறை கட்டுப்பாட்டில் வருகிறது. இதனால் அங்கு சாலை அமைக்க அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக சாலையை பராமரிக்காததால் சேதமடைந்துள்ளது.
மேலும் நேற்று வருசநாடு பகுதியில் கனமழை பெய்தது. இதனால் சாலை முழுவதும் உருக்குலைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறி விட்டது. இதனால் ஆட்டோ க்களில் செல்லமுடியாத நிலையில் பொதுமக்கள் நீண்டதூரம் நடந்து சென்று வருகின்றனர். மேலும் பைக்கில் செல்பவ ர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே மாவட்ட அதிகாரிகள் வனத்துறை யினருடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.