கோவையில் ராணுவ வீரரிடம் ரூ.4½ லட்சம் மோசடி
- நடராஜன் கோவை பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.
- 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீளமேடு,
கோவை சவுரிபாளையம் மீனா எஸ்டேட் பகுதி சேர்ந்தவர் நடராஜன் (வயது 57). இவர் கோவை பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். அதன் பின்னர் காய்கறி கடை அமைத்து மொத்த வியாபாரம் செய்து வருகிறேன். அப்போது சாகர் சிபேட், அமுபா அமித் குமார், கணேஷ் என்பவர்கள் அறிமுகமானார்கள்.
அவர்கள் மகாராஷ்டிரா ஹமத் நகர் பகுதியில் வெங்காய மொத்த வியாபாரம் செய்து வருவதாக என்னிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து 50 டன் வெங்காயத்தை மொத்தமாக கொள்முதல் செய்ய முடிவு செய்தேன்.
அதற்காக சாகர் சிபேட் ரூ. 4,50,000-யை அமுபா அமித் குமாரின் வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு கூறினார். நானு ம் அந்த பணத்தை அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அதன் பின்னர் அவர்கள் இதுவரை வெங்க ாயத்தை அனுப்பி வைக்க வில்லை.
அவர் களிடம் இதுகுறித்து கேட்டபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில்களை கூறி வருகின் றனர். அப்போ துதான் அவர்கள் என்னை ஏமாற்றி வருவது தெரிய வந்தது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து பீளமேடு போலீசார் ராணுவ வீரரிடம் மோசடியில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.