உள்ளூர் செய்திகள்

மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. நீர்த்தேக்க சீரமைப்பு பணிகளைதொடங்கி வைத்தபோது எடுத்த படம்.

ஓட்டப்பிடராம் அருகே ரூ. 5.6 கோடியில் எப்போதும்வென்றான் நீர்த்தேக்க சீரமைப்பு பணி - மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2023-06-27 08:47 GMT   |   Update On 2023-06-27 08:47 GMT
  • எப்போதும் வென்றான் நீர்தேக்கத்தில் அதிகளவு மண் படிந்துள்ளதால் தற்போதைய கொள்ளளவு 104 மில்லியன் கனஅடியாக குறைந்துள்ளது.
  • நீர்த்தேக்கத்தில் இருந்து 20 மில்லியன் கன அடி மண் ரூ. 7.84 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது என்று மார்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசினார்.

ஓட்டப்பிடராம்:

ஓட்டப்பிடராம் தாலுகா எப்போதும்வென்றானில் கடந்த 1976-ம் ஆண்டு 4 மீட்டர் உயரமும், 2,670 மீட்டர் நீளமும் கொண்ட நீர்த்தேக்கம் கட்டப்பட்டது.

1,200 ஏக்கர் நிலம் பாசன வசதி

இந்த நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 124 மில்லியன் கன அடியாகும். 642.87 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நீர்த்தேகத்தில் 2 மதகுகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த நீர்த்தேக்கம் மூலம் எப்பொதும்வென்றான், காட்டுநாயக்கன்பட்டி, ஆதனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 1,200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது.

இந்த நீர்த்தேக்கம் தூர்வாரப்படாததால் மண்மேடாகி, சிறுமழை பெய்தால் கூட நிரம்பி மறுகால்பாயும் நிலை நீடிக்கிறது. நீர்த்தேக்கத்தை தூர்வாரி, ஆழப்படுத்த வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் எப்போதும்வென்றான் நீர்த்தேக்கத்தில் ரூ. 5.60 கோடி திட்ட மதிப்பீட்டில் நீர்வள ஆதாரத்துறை சார்பில் மறுசீரமைப்பு பணிகள் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவுக்கு கோரம்பள்ளம் ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் வசந்தி தலைமை தாங்கினார். யூனியன் துணைத் தலைவர் காசிவிஸ்வநாதன், உதவி செயற்பொறியாளர் சுபாஷ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. நீர்தக்க சீரமைப்பு பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், எப்போதும்வென்றான் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 3.53 மில்லியன் கனஅடியாகும். அதிகளவு மண் படிந்துள்ளதால் தற்போதைய கொள்ளளவு 104 மில்லியன் கனஅடியாக குறைந்துள்ளது.

இதில், நீர்த்தேக்கத்தில் இருந்து 20 மில்லியன் கன அடி மண் ரூ. 7.84 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது. மண்ணை அகற்றுவதன் மூலம் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டும். இதனால் பயிரிடும் நிலங்களும் அதிகரிக்கும். இத்திட்டத்தின் மூலம் எப்போதும்வென்றான் மற்றும் காட்டு நாயக்கன்பட்டி கிராமங்க ளில் உள்ள விவசாயிகள் பயனடை வார்கள் என்றார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் உருவாட்டி, வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஓட்டப்பிடா ரம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் முத்துராஜ், குதிரைகுளம் பஞ்சாயத்து தலைவர் சண்முகையா, நீர்வளத்துறை பாசன விவசாயிகள் சங்க தலைவர் குமாரவேல், தி.மு.க. ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மகாராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News