சிக்காரம்பாளையம் ஊராட்சியில் கிராமிய சேவை திட்டம் தொடக்கம்
- விழாவிற்கு சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார்.
- சென்னி வீரம்பாளையம் கிராம பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே சிக்காரம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சென்னி வீரம்பாளையம் கிராமத்தில் உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் கிராமிய சேவை திட்டம் தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார்.
உலக சமுதாய சேவா சங்கத்தின் கோவை மண்டல துணைத் தலைவர் வெள்ளிங்கிரி வரவேற்றார். ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ, பேராசிரியர் பாலமுருகன், ஒருங்கிணைப்பாளர் குரு ரங்கதுரை, வி.பி.எம். நந்தகுமார், ஓய்வு பெற்ற ஆசிரியர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உலக சமுதாய சேவா சங்கத்தின் கிராமிய சேவை திட்ட இயக்குனர் முருகானந்தம் திட்ட விளக்க உரையாற்றினார்.
உலக சமுதாய சேவா சங்கத்தின் கோவை மண்டல தலைவர் பச்சையப்பன், டாக்டர் ஹரிதாஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் மயிலானந்தன் காணொளி காட்சி வாயிலாக கிராமிய சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் நோயற்ற வாழ்வு கல்வியில் மேன்மை, சுற்றுப்புற சுகாதாரம், முதியோரை பாதுகாத்தல், மகளிர் மேம்பாடு, குடும்ப அமைதி, கர்மயோக வாழ்க்கை நெறி, மனிதநேயம், மத நல்லிணக்கம், சமுதாய விழிப்புணர்வு ,தூய்மையும் பசுமையும் மிக்க ஆரோக்கியமான அமைதியான கிராமம் என இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என ஊராட்சி தலைவர் ஞானசேகரன் தெரிவித்தார் .
சென்னி வீரம்பாளையம் கிராம பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. காரமடை மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார் நன்றி கூறினார்.