உள்ளூர் செய்திகள்
சேலம் சிக்கன் கடையில் 40 லிட்டர் கெட்டு போன சமையல் எண்ணை பறிமுதல்
- சிக்கன் கடையில் கெட்டுப்போன உணவுப் பொருள் விற்பதாக புகார் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- அந்த கடையில் சோதனை நடத்தினர்.
சேலம்:
சேலம் மெய்யனூரில் உள்ள சிக்கன் கடையில் கெட்டுப்போன உணவுப் பொருள் விற்பதாக புகார் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான அதிகாரிகள், அந்த கடையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு உணவுக்கு ஒவ்வாத கெட்டு போன 40 லிட்டர் சமையல் எண்ணை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 40 லிட்டர் எண்ைண பறிமுதல் செய்யப்பட்டது. இந்த எண்ணை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளதும், அவற்றை மீண்டும் பயன்படுத்த வேண்டி விற்க முயற்சி செய்துள்ளதும் தெரியவந்தது. இந்த எண்ணையில் தயாரிக்கப்படும் உணவை உட்கொண்டால் பல நோய்கள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட அந்த சிக்கன் கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.