உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடன் உதவி

Published On 2023-06-03 07:34 GMT   |   Update On 2023-06-03 07:34 GMT
  • புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் மற்றும் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் போன்ற மானி யத்துடன் கூடிய திட்டங்களை மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தி வருகிறது.
  • இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்கி பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.

சேலம்:

தமிழ்நாடு அரசு ஆர்வ முள்ள படித்த இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்க ஆவன செய்யும் வகையில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் மற்றும் படித்த வேலையற்ற இளை ஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் போன்ற மானி யத்துடன் கூடிய திட்டங்களை மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு பொது பிரிவினருக்கு 35-லிருந்து 45-ஆகவும், சிறப்பு பிரி வினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45-லிருந்து 55-ஆகவும் உயர்த்தி தமிழ்நாடு அரசு தற்பொழுது அர சாணை வெளியிட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு அரசின் மூலம் செயல்ப டுத்தப்படும் மானியத்துடன் கூடிய கடனு தவி திட்டமான படித்த வேலையற்ற இளைஞர்க ளுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாகவும், தகுதியான அதிகபட்ச மானியம் ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ.3.75 லட்சமாகவும் உயர்த்தி அர சாணை வெளி யிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்கி பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம். இணை யதளத்தில் கல்வித் தகு திக்கான சான்றிதழ், குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது வட்டாட்சியரால் வழங்கப்பட்ட இருப்பிட சான்று, விலைப்புள்ளி பட்டியல், திட்ட அறிக்கை மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை பதி வேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றப்பட்ட விண்ணப்பம் மற்றும் ஆவணங்கள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட வங்கி கிளைக ளுக்கு தகுதியின் அடிப்படை யில் பரிந்துரை செய்யப்படும்.

எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள ஆர்வ முள்ள தொழில் முனை வோர்கள் புதிய தளர்வுகளு டன் கூடிய நீட்ஸ் மற்றும் யூ.ஒய்.இ.ஜி.பி. திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய கடன் பெற்று சுய தொழில் தொடங்கி பயனடையலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News