உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் 17 டாஸ்மாக் கடைகள் மூடி சீல் வைப்பு

Published On 2023-06-22 10:05 GMT   |   Update On 2023-06-22 10:05 GMT
  • தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது அறிவித்தபடி 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
  • இதையடுத்து தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் மூடப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சேலம்:

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது அறிவித்தபடி 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணிகள் நடந்து வந்தது.சேலம் மாவட்டத்தில்

17 டாஸ்மாக் கடைகள் மூடி சீல் வைப்பு

அதன்படி, எந்தெந்த கடைகளை மூடலாம் என்பது குறித்தும், ஒவ்வொரு மண்டலத்திலும் எத்தனை கடைகள் மூடப்பட உள்ளன என்பது பற்றியும் டாஸ்மாக் மண்டல மேலாளர்கள் மூலம் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் மூடப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அந்த வகையில் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களில் மொத்தம் 59 டாஸ்மாக் கடைகள் இன்று மூடப்பட்டது.

சீல் வைப்பு

சேலம் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 211 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 17 கடைகள் மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த கடைகளுக்கு இன்று காலை அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். பின்னர் அந்த கடைகளின் இரும்பு ஷட்டர் கதவை பூட்டி சீல் வைத்தனர்.

மாநகராட்சியில்

8 கடைகள்

மாவட்டத்தில் மூடப்பட்ட 17 டாஸ்மாக் கடைகள் விபரம் வருமாறு:-

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிரட்ஸ் ரோடு முள்ளுவாடி கேட்-1, குகை அப்சரா இறக்கம்-1, லீ பஜார்-1, செவ்வாய்ப்பேட்டை வெங்கடப்பரோடு-1, நெத்திமேடு-1, திருச்சி மெயின்ரோடு வேலுநகர்-1, கொண்டலாம்பட்டி சந்தைப்பேட்டை மெயின்ரோடு-1, கந்தம்பட்டி-1 ஆகிய 8 கடைகள் மூடப்பட்டன.

நகராட்சி பகுதிக்கு உட்பட்ட சிவதாபுரம் சித்தர் கோவில் மெயின் ரோடு-1, பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட மேட்டூர் துருவாகாடு-1, மேச்சேரி டவுன் -2, எம்.காளிப் பட்டி-1, கொளத்தூர்-1, ஊராட்சிக்கு உட்பட்ட தங்காயூர்-1, தீவட்டிப் பட்டி-1, தலைவாசல் டவுன்-1 ஆகிய 9 கடைகள் மூடப்பட்டன.

நாமக்கல்

அதேபோல், தர்மபுரி மாவட்டத்தில் 4 டாஸ்மாக் கடைகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 டாஸ்மாக் கடைகளும், நாமக்கல் மாவட்டத்தில் 18 கடைகளும் மூடப்பட்டது.

Tags:    

Similar News